பிரித்தானிய பிரதிநிதிகள் சம்பந்தனை சந்தித்தனர்
இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக வதிவிட துணைச் செயலாளர் சைமன் மெக்டொனால்ட் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான இங்கிலாந்து திணைக்களத்தின் நிரந்தர வதிவிட துணைச் செயலாளர் மார்க் லோவ்கொக் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நேற்று முன்தினம் சந்தித்து கலந்து ரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் உடனிருந்தார். இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்குடன் இவ்விருவரும் இலங்கைக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்துள்ளனர்.
இவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடுவர் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பிரதிநிதிகள் சம்பந்தனை சந்தித்தனர்
Reviewed by Author
on
June 08, 2016
Rating:

No comments:
Post a Comment