அண்மைய செய்திகள்

recent
-

பிரபல உலக குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி காலமானார்!


குத்துச்சண்டை உலகின் தலைசிறந்த வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74 ஆவது வயதில் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவாசக் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் எரிசோனா பினிக்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சற்று முன்னர் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே (Cassius Marcellus Clay) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்த பின் தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிக் கொண்டார்.

1942ஆம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி பிறந்த தி கிரேடேஸ்ட் (The Greatest), தி லூயிவிள்ளே லிப் (The Louisville Lip) என்ற பல்வேறு பட்டப் பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.

இவர் கலந்து கொண்ட 61 குத்துச் சண்டை போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 05 போட்டிகளிலேயே தோல்வியடைந்துள்ளார்.

குத்துச்சண்டை அரங்கில் பல சாதனைகளுக்கு உரித்துடைய மொஹமட் அலி 1981 ஆம் ஆண்டு சர்வதேச குத்துச்சண்டை கோதாவிலிருந்து விடைபெற்றார்.


'தி கிரேட்டஸ்ட்' என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முகமது அலி(74) சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.
காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முகமது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழ்ந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி,வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்தே தோல்விகளையும் கண்டவர் என்ற தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரரும் ஆவார்.
கடந்த முப்பது ஆண்டுகளாக ‘பார்கின்சன்டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி,1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முகமது அலி, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வருகிறார்.
சுவாசம் சார்ந்த பிரச்சனைகளால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் முகமது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக முஹம்மது அலியின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.


பிரபல உலக குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி காலமானார்! Reviewed by Author on June 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.