ஒலிம்பிக்கில் முதன்முறையாக அகதிகள் அணி!
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக பங்கேற்கும் அகதிகள் அணியை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 5-ம் திகதி பிரேசிலில் 31-வது கோடை கால ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் அகதிகள் அணி பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
அணியில் 6 வீரர்கள், 4 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அணியின் அதிகாரிகளாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒலிம்பிக் கொடியின் கீழ் இவர்கள் பங்கேற்பார்கள். தெற்குசூடான், சிரியா, காங்கோ, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
சர்வசேத ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் பேசுகையில், 206 நாடுகளை பிரதிநிதித்துவப்படும் வீரர்களுக்கு இணையாக, அகதி வீரர்கள் அடங்கிய அணியும் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒரே மாதிரியாக நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் முதன்முறையாக அகதிகள் அணி!
Reviewed by Author
on
June 04, 2016
Rating:

No comments:
Post a Comment