மீண்டும் பழைய நிலை ஏற்பட்டுவிடக்கூடாது- ஊடகவியலாளர்கள் பாதுகாக்கும் குழு....
சிங்கள மீபுர செய்தித்தாளின் ஆசிரியர் தாக்கப்பட்டமை குறித்து பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஊடகவியலாளர்கள் பாதுகாக்கும் குழு, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீர்கொழும்பில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டபின்னர் தமது வாகனத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ப்ரேடி கமகே மீது இரண்டு நாட்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முழுமையாக தலைகவசம் அணிந்த இருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
எனினும் அவர் ஜூன் முதலாம் திகதி எழுதிய அதிகாரிகளின் ஊழல் தொடர்பிலேயே இந்ததாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மீண்டும் இலங்கையில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் பழைய நிலையை கொண்டு வந்து விடக்கூடாது என்று ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவின் ஆசிய நிகழ்ச்சி இணைப்பாளர் பொப் டைட்ஸ் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பழைய நிலை ஏற்பட்டுவிடக்கூடாது- ஊடகவியலாளர்கள் பாதுகாக்கும் குழு....
Reviewed by Author
on
June 04, 2016
Rating:

No comments:
Post a Comment