செரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் முகுருஸா!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் அவர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கார்பைன் முகுருஸா 7-5, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸிக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
இதன் மூலம் கடந்த 18 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமை முகுருஸாவுக்கு கிடைத்துள்ளது.
வெற்றி குறித்துப் பேசிய முகுருஸா, கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றில் உலகின் தலைசிறந்த வீராங்கனைக்கு எதிராக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது.
ஸ்பெயினின் தலைசிறந்த "கிளே கோர்ட்' வீராங்கனையாக நான் வளர்ச்சியடைந்திருப்பது வியப்பாக இருக்கிறது.
செரீனா மிகுந்த ஆற்றல் வாய்ந்த வீராங்கனை. அவருக்கு எதிராக என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆட முயற்சித்தேன் என கூறியுள்ளார்.
செரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் முகுருஸா!
Reviewed by Author
on
June 05, 2016
Rating:
Reviewed by Author
on
June 05, 2016
Rating:


No comments:
Post a Comment