ஒவ்வொரு பாடசாலையிலும் ஒரு ஆசிரியர் பரீட்சைகள் ஒருங்கிணைப்பாளராக நியமனம்!
ஒவ்வொரு பாடசாலையிலும் ஆசிரியர் அல்லது ஆசிரியை ஒருவர் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்களைப் போலவே ஆசிரியர்கள் தோற்றும் பரீட்சைகள் தொடர்பான சுற்றுநிருபங்களின் அடிப்படையில் இவர் பரீட்சார்த்திகளுக்கான விளக்கங்களை அளிப்பதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பரீட்சைத் திணைக்களத்துக்கு அறிவித்து உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உதவி செய்வார்.
விசேடமாக பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை அனுப்பும் போது பரீட்சார்த்திகளின் பெயர்களும் இதர விவரங்களும் சரியாகக் குறிப்பிடப்படாததால் அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களில் தரும் பெயர்களே அவர்களது பரீட்சை அனுமதிப் பத்திரங்களிலும் பரீட்சை சான்றிதழ்களிலும் குறிப்பிடப்படுகின்றன. இந்த முரண்பாடு அவர்களுக்குப் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுபவர் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவார்.
அத்துடன் பரீட்சைகளுக்குத் தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள் பற்றி மாணவர்களுக்கும் பதவியுயர்வுகள் பெறுவதற்கான பரீட்சைகள் பற்றி ஆசிரியர்களுக்கும் இவர் சரியான விளக்கங்களை அளிப்பார் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பாடசாலையிலும் ஒரு ஆசிரியர் பரீட்சைகள் ஒருங்கிணைப்பாளராக நியமனம்!
Reviewed by Author
on
June 04, 2016
Rating:

No comments:
Post a Comment