அண்மைய செய்திகள்

recent
-

உர மானியத்தை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தவில்லை!


உர மானியத்தை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தவில்லை என விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊகடமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

அரசாங்கம் இம்முறை விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்ய மானியமாக பணத்தை வழங்கியிருந்தது. எனினும் இந்தப் பணத்தைக் கொண்டு உரம் கொள்வனவு செய்யப்படவில்லை.

உர மானியமாக வழங்கப்பட்ட ஐம்பது லட்ச ரூபா வரையிலான பணம் வேறு தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

உர மானிய பணத்தை வேறும் தேவைகளுக்குப் பயன்படுத்த விவசாய அமைச்சின் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

விவசாயம் செய்யும் நிலப் பரப்பின் அடிப்படையில் உர மானியப் பணம் வழங்கப்பட்டது. இந்தப் பணம் விவசாயிகளின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டது.

5000, 10000, 15000, 20000 மற்றும் 25000 ரூபா ஆகியளவில் உதவி வழங்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உர மானியத்தை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தவில்லை! Reviewed by NEWMANNAR on June 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.