ஐந்து இலட்சம் பெறுமதியான முதிரை மரத்துடன் ஒருவர் கைது
கிளிநொச்சி – அக்கராயன் 4ஆம் கட்டை பகுதியில் சுமார் ஐந்து இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற பார ஊர்தியுடன் ஒருவரை வன பரிபாலன திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
இன்று (17) காலை அதிகாலை 5.30 மணியளவில் வன பரிபாலன திணைக்களத்தின் வட்டார அதிகாரி என் செல்வநாயகம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுத்திவளைப்பு நடவடிக்கையின் போதே மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற பார ஊர்தியையும் சாரதியையும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வாகனத்தில் தேங்காய்கள் ஏற்றிச் செல்வது போன்று ஐந்து இலட்சம் பெறுமதியான முதிரை மரங்கள் ஏற்றி செல்லப்பட்டதாக வன பரிபாலன திணைக்களஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த நபரை இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஐந்து இலட்சம் பெறுமதியான முதிரை மரத்துடன் ஒருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
June 17, 2016
Rating:

No comments:
Post a Comment