அண்மைய செய்திகள்

recent
-

புதிய மைல்கல்லை எட்டிய குமார் சங்கக்காரா....


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா முதல் தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டை கலக்கிய சங்கக்காரா, முதல்தரப் போட்டிகளில் Central Province, Colombo District Cricket Association, Durham, Kandurata, Marylebone Cricket Club, Nondescripts Cricket Club மற்றும் Warwickshire ஆகிய அணிக்காக விளையாடினார்.

இந்நிலையில் முதல்தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 246 போட்டிகளில் ஆடியுள்ள சங்கக்காரா மொத்தம் 19,011 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இதன் மூலம் 19 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னாள் இலங்கை வீரர் ஜெகன் மெண்டிஸ் 366 போட்டிகளில் 21,436 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

இலங்கை சேர்ந்த ஜெயவர்த்தனே (17,843), திலன் சமர்வீரா (15,501), லடி அவுட்ஸ்சோரன் (15,496) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

புதிய மைல்கல்லை எட்டிய குமார் சங்கக்காரா.... Reviewed by Author on June 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.