அண்மைய செய்திகள்

recent
-

ஈழ அகதிகளின் போராட்டத்துக்கு தற்காலிக வெற்றி! இந்தோனேசியாவில் தற்காலிக தங்குமிடம்....


இந்தோனேசியா அச்சே பிராந்தியத்தில் நிர்க்கதியான நிலையில் ஒதுங்கிய இலங்கைதமிழ் அகதிகள் மீண்டும் சர்வதேச கடலில் கொண்டு சென்று விடப்படுவார்கள் என்றதீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்களை இந்தோனேசியாவில் தற்காலிகமா தங்க வைத்து உண்மையான அகதிகள்மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றப்படுவார்கள் என்று இந்தோனேசிய அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பழுதடைந்திருந்த படகை திருத்திய பின்னர் அகதிகள் மீண்டும் சர்வதேச கடலில்சென்று விடப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியாவை நோக்கிய அவர்களை பயணத்துக்குஅனுமதிக்கப்படுவார்கள் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்

எனினும் அகதிகளின் படகு திருத்தமுடியாத நிலையில் உள்ளதாகவும் அதனை மீண்டும் கடல்பயணத்துக்கு அனுமதிக்கமுடியாது என்றும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே இந்தோனேசிய குடிவரவு அதிகாரிகள், அகதிகளை தற்காலிகமாக தங்கவைக்கும்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இதேவேளை இவர்களுக்கு உதவும் முகமாக சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

ஈழ அகதிகளின் போராட்டத்துக்கு தற்காலிக வெற்றி! இந்தோனேசியாவில் தற்காலிக தங்குமிடம்.... Reviewed by Author on June 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.