அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா இளைஞனால் தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு!


வவுனியா இளைஞர் ஒருவரால் தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் வசித்து வரும் என்.என்.ஜக்சன் (வயது 30) என்ற இளைஞனால் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி இயங்கக் கூடிய தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது 10 வயதில் இருந்து சூழலுக்கு பாதிப்பில்லாத இயந்திரங்களை கண்டு பிடிப்பது தொடர்பில் ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளைஞன், இது வரை 21 கண்டுபிடிப்பிடிப்புக்களை செய்துள்ளதாகவும், அவற்றின் தொழில்நுட்ப உரிமத்தை விற்பனை செய்ய தான் ஆர்வமாக உள்ள போதும் நிறுவனங்கள் பல அதனை வாங்க முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை விசேட தேவைக்குட்பட்டோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட மலசலகூட தொகுதியின் தொழில்நுட்ப உரிமத்தை இந்திய நிறவனம் ஒன்று தன்னிடம் இருந்து பெற்றுக் கொண்டாதாக தெரிவித்த இளைஞன் தற்போது தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரத்தின் தொழில் நுட்ப உரிமைத்தை ஈஸ்ரன் ஈகிள் புறொப்பட்டிஸ் டெவெலப்பர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

குறித்த தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரத்தின் தொழில்நுட்ப உரிமத்தை வவுனியா அருந்ததி விருந்தினர் விடுதியில் வைத்து ஈஸ்ரன் ஈகிள் புறொப்பட்டி டெவலப்பர்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் டிமன்தா கருணாரத்னவிடம் கையளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை குறித்த உரிமத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனத்தின் தலைவர் தெரிவிக்கும் போது, தற்போது தம்மால் பெறப்பட்டுள்ள தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் எதிர்வரும் 6 மாதங்கள் தொடக்கம் ஒரு வருடத்திற்குள் சந்தையில் விற்பனைக்காக வரும் எனவும் அவற்றை 15,000 ரூபாய் தொடக்கம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் வரை அளவின் அடிப்படையில் விற்பனை செய்ய முடியும் எனவும் விவசாயிகளுக்கும், தோட்டச் செய்கையாளர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் தெரிவித்தார்.

வவுனியா இளைஞனால் தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு! Reviewed by Author on June 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.