மன்னாரில் 3 பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் கடத்தல்.Photos
மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(29) புதன் கிழமை அதிகாலை உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி நேற்று புதன் கிழமை இரவு மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடத்தப்பட்டு காணாமல் போனவர் மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி(வயது-38) என தெரியவந்தள்ளது.
குறித்த குடும்பஸ்தர் உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் கடமையாற்றி வந்த நிலையில் நேற்று புதன் கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஆலய பங்கு பணிமனையில் வைத்து கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தரை புலனாய்வுத்துறையினர் என தங்களை அறிமுகப்படுத்திய சிலர் அண்மைக்காலமாக மன்னார் பள்ளிமுனையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அச்சுரூத்தல்களை விடுத்து வந்த நிலையில் கடந்த 1 ஆம் திகதி மீண்டும் புலனாய்வுத்துறையினர் என தம்மை அறிமுகப்படுத்திய சிலர் காணாமல் போன குடும்பஸ்தரின் வீட்டிற்குச் சென்று அவர் தொடர்பில் விசாரித்துள்ளனர்.
குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில் 19 ஆம் திகதி மீண்டும் வருவோம் என கூறிச் சென்றுள்ளர்.
-குறித்த சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
-இந்த நிலையிலே குறித்த குடும்பஸ்தர் நேற்று புதன் கிழமை அதிகாலை ஆலய பங்கு பணிமனையில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
-இந்த நிலையில் தனது கணவன் கடத்தப்பட்ட விடையம் தொடர்பாக அவரது மனைவி தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும்,குறித்த சம்பவம் குறித்து உரிய விசாரனைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
(30-06-2016)
கடத்தப்பட்டு காணாமல் போனவர் மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி(வயது-38) என தெரியவந்தள்ளது.
குறித்த குடும்பஸ்தர் உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் கடமையாற்றி வந்த நிலையில் நேற்று புதன் கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஆலய பங்கு பணிமனையில் வைத்து கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தரை புலனாய்வுத்துறையினர் என தங்களை அறிமுகப்படுத்திய சிலர் அண்மைக்காலமாக மன்னார் பள்ளிமுனையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அச்சுரூத்தல்களை விடுத்து வந்த நிலையில் கடந்த 1 ஆம் திகதி மீண்டும் புலனாய்வுத்துறையினர் என தம்மை அறிமுகப்படுத்திய சிலர் காணாமல் போன குடும்பஸ்தரின் வீட்டிற்குச் சென்று அவர் தொடர்பில் விசாரித்துள்ளனர்.
குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில் 19 ஆம் திகதி மீண்டும் வருவோம் என கூறிச் சென்றுள்ளர்.
-குறித்த சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

-இந்த நிலையில் தனது கணவன் கடத்தப்பட்ட விடையம் தொடர்பாக அவரது மனைவி தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும்,குறித்த சம்பவம் குறித்து உரிய விசாரனைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
(30-06-2016)
மன்னாரில் 3 பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் கடத்தல்.Photos
Reviewed by NEWMANNAR
on
June 30, 2016
Rating:

No comments:
Post a Comment