அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஷ்டஈட்டை வழங்க கோரிக்கை

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் பேசாலை கிராம மீனவர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈட்டை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 16ம் திகதி அதிகாலை ஏற்பட்ட திடீர் சுழற்காற்றின் காரணமாக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த றோலர் படகுகள் மூழ்கியதுடன் மேலும் 47 றோலர் படகுகள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளன.

இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான றோலர் படகுகள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ள நிலையில் குறித்த மீனவ குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சக மீனவர்களின் உதவியுடன் கடலில் மூழ்கிய றோலர் படகுகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேடுதலின் போது சேதங்களுடன் 37 றோலர் படகுகள் மீட்கப்பட்ட போதும் மோலும் 10 படகுகள் முழுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தமக்கான நஷ்டஈட்டை வழங்குமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னாரில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஷ்டஈட்டை வழங்க கோரிக்கை Reviewed by NEWMANNAR on June 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.