அண்மைய செய்திகள்

recent
-

ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும், ஊடகவியலாளருமான ப்ரெடி கமகே தாக்கப்பட்டமைக்கு மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் கண்டனம்.


ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான ப்ரெடி கமகே, இன்று வியாழக்கிழமை நீர்கொழும்பு மாநகரசபைக்கு அருகில் வைத்து தாக்குதல் இனம் தெரியாத நபர்களினால் தாக்கியமை இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கும், சுயாதீனமான செயற்பாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் செய்யும் மாபெரும் தவறு என்பதனை மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான ப்ரெடி கமகே இவர் இனம், மதம் மொழிக்கு அப்பால் நீதியானதும், சுயாதீனமாகவும் சிந்தித்து செயற்படக் கூடியவர்.

இவர் குறிப்பாக வட கிழக்கு,தெற்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவும், காணிப்அபகரிப்பு, மீள்குடியேற்றம் தொடர்பாக கரிசனையுடன் செயற்பட்டு பிரச்சினைகளை அவ்வப்போது வெளிகொண்டுவருவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்.

பல மக்கள் சார்ந்த போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்பணித்து செயற்படும் ஒரு நீதியான ஊடகவியலாளரை இனம் தெரியாத நபர்கள் தாக்கியமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவை என மனித உரிமை செயற்பாட்டாளன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நீர்கொழும்பு மாநகர சபையின் மாதாந்த ஒன்றுகூடல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற நிலையிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி சேகரித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் ஏற முற்பட்ட போது பின்னால் வந்த நபர்கள் தன் மீது தடியடி தாக்குதல் நடத்தினார்கள் என தாக்குதலுக்கு உள்ளான ப்ரெடி கமகே தெரிவித்துள்ளார்.

தாக்குதலையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற ப்ரெடி கமகே, முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

எனவே நல்லிணக்க அரசாங்கம் ஊடகவியளாரை தாக்கிய நபர்களை இனம் கண்டு நீதியின் முன் நிறுத்தி ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் ஊடக பணியில் சிறப்பாகவும், சுயாதீனமாகவும், செயற்படக்கூடிய வகையில் இந்த அரசாங்கமும் மத்திய ஊடகத்துறை அமைச்சரும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும், ஊடகவியலாளருமான ப்ரெடி கமகே தாக்கப்பட்டமைக்கு மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் கண்டனம். Reviewed by NEWMANNAR on June 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.