22.06.2016 அன்று பாரளுமன்றத்தில் சாள்ஸ் எம் பி ஆற்றிய உரை .. Video
22.06.2016 அன்று பாரளுமன்றத்தில் சாள்ஸ் எம் பி முழுமையான உரை ..
[பி.ப. 5.33]
ගරු ඉ. චාල්ස් නිර්මලනාදන් මහතා
(மாண்புமிகு இ. சாள்ஸ் நிர்மலநாதன்)
(The Hon. I. Charles Nirmalanathan)
கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, இன்று இந்த நாட்டின் பிரதம மந்திரி அவர்கள்,
எதிர்க்கட்சியினர் உட்பட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் ஆணையாளரின்
பரிந்துரைக்கமைவாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள 36 வழிகாட்டுநெறிகளை
நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்க வேண்டுமென்று இந்தப்
பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைக்
கோரியுள்ளார். அவர் தனது உரையில் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படியான
ஊடக சுதந்திரம் இருக்கின்றதென்று குறிப்பிட்டார். அதற்குப் பிறகு பேசிய வன சீவராசிகளுக்குப்
பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் அவர்கள், இந்தியாவில் தேர்தல் ஆணையாளருக்கு இருக்கின்ற
அதிகாரங்கள் தொடர்பாக குறிப்பிட்டு அதில் தனக்கிருந்த நேரடி அனுபவம் பற்றியும் இந்த
சபையில் குறிப்பிட்டிருந்தார். தங்களுக்குச் சார்பான விடயங்கள் வரும்போது பிரித்தானியா,
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை உதாரணமாகக் காட்டுகின்ற இவர்களிடம் நான் ஒன்றைக்
கேட்க வேண்டும். அதாவது, பிரித்தானிவிலும் அமெரிக்காவிலும் இருக்கின்ற கெளரவமான
வாழ்க்கையை, தனிமனித சுதந்திரத்தை உதாரணத்துக்கு எடுத்து எங்களுடைய மக்களுக்கு
அத்தகைய வாழ்வை ஏன் நீங்கள் கொடுக்கக்கூடாது? இந்தச் சபையில் இந்தப் பிரேரணை
தொடர்பாகப் பேசி, பிற நாடுகளிலுள்ள சட்டங்களை உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதம
மந்தியிடமும், அமைச்சர்களிடமும் இந்தக் கேள்வியை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.
அதேநேரத்தில் ஊடகமானது நாட்டை நிர்வகிக்கின்ற அரசாங்கம் அல்லது மாகாணத்தை
நிர்வகிக்கின்ற மாகாண அரசு சரியான முறையில் இயங்குகின்றதாவென்பதை அவதானிக்கின்றது.
அந்த வகையில், அவற்றைச் சரியான முறையில் இயக்கவைக்கின்ற அளப்பரிய சேவையைத்தான்
ஊடகங்கள் செய்து வருகின்றன. இன்றைய தலைப்பின் பிரகாரம், தேர்தல் காலங்களில் ஊடகங்கள்
எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டுமென்பது தொடர்பாக இன்றைய விவாதம் அமைந்துள்ளது.
ஆனால், இலங்கையில் நடக்கின்ற மிக முக்கியமான தேர்தல்களில் அரசாங்கத்திற்குச் சார்பாகவே
ஊடகங்கள் செயற்படுகின்றன. இது ஊடகங்களுக்கு இருக்கின்ற சுதந்திரமல்ல. அவற்றுக்கு
நடுநிலையாகச் செயற்படுவதற்கு விருப்பம் உள்ளது. ஆனால், ஊடகவியலாளர்களை
அச்சுறுத்துகின்ற ஆளுங்கட்சியின் அதிகாரம்தான் அவர்களை அப்படிச் செய்யவைக்கின்றதோ
என்று எனக்குத் தோன்றுகின்றது. ஏனென்றால், பலர் இங்கு குறிப்பிட்டிருந்தார்கள், கடந்த
ஆட்சியில் ஊடக சுதந்திரமற்ற நிலைதான் காணப்பட்டதென்று. அதாவது ஓர் அரச அதிகாரி -
பாதுகாப்புச் செயலாளர் ஊடகங்களைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தார். அது
முற்றுமுழுதாக நிராகரிக்கப்படவேண்டிய விடயம். இருந்தாலும், பழைய விடயங்களைத்
தற்போது கூறாது, இப்போது நாட்டிலிருக்கின்ற நிலைமை பற்றிக் கூறலாமென்று
நினைக்கின்றேன்.
புதிய ஜனாதிபதி மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதன் பின்பு ஒரு
பாராளுமன்றத் தேர்தல் நடந்துமுடிந்தது. அந்தத் தேர்தல் காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை
உதாரணமாக உங்களுக்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஏனென்றால், உங்களுடைய
வாதங்களிலே இந்தப் புதிய ஆட்சியில் ஊடக சுதந்திரம் முற்றுமுழுதாக இருக்கின்றதெனத்
தெட்டத்தெளிவாகச் சொன்னீர்கள். ஆனால், அதை நான் மறுக்கின்றேன். முன்னைய ஆட்சியுடன்
ஒப்பிடும்போது ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும், உங்களுடைய ஆட்சியிலும் அதே அதிகாரம்
பாவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அதாவது நான்
போட்டியிட்ட பாராளுமன்றத் தேர்தல் காலத்தின்போது, தேர்தலிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு
மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்பான அரச அதிகாரிகளும் கடந்த காலத்தில் அமைச்சரவை
அந்தஸ்தில் இருந்த அமைச்சர் ஒருவரும் வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள்
வாழ்கின்ற ஒரு முகாமிற்குச் சென்று "உங்களை நாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்போகின்றோம்.
அதுவும் இன்றே குடியேற்றம் செய்யப்போகின்றோம்" என்று கூறி, அந்த மக்களை ஏமாற்றி அந்த
மக்களுடைய வாக்கைப் பெறுகின்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது ஓர் ஊடகவியலாளர்
என்னுடன் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு, "இப்படியொரு சம்பவம் வவுனியாவில்
நடைபெறுகின்றது. ஆனால், எங்களுக்கு இதை வெளியில் சொல்லப் பயமாக இருக்கின்றது.
நீங்கள் தான் இதைப் பார்க்கவேண்டும்" என்று சொன்னார். அப்படி அதனை என்னிடம் சொல்லாமல்,
தன்னுடைய அச்சு ஊடகத்திலோ அல்லது இணையத்தள ஊடகத்திலோ அந்த உண்மையை
வெளிப்படுத்தக்கூடிய தன்னம்பிக்கை அந்த ஊடகவியலாளருக்கு ஏற்படாமைக்குக் காரணம், இந்த
ஆட்சியிலும் சிலருடைய அதிகார பலம், பண பலம் என்பனமூலம் ஊடகவியலாளர்கள்
அடக்கியாளப்படுகின்ற தன்மையே என்பதை நான் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள
விரும்புகின்றேன்.
அதேநேரத்தில், நாங்கள் இந்தப் பாராளுமன்றத்தின்மூலம் நாட்டுக்குத் தேவையான சட்டங்களை
உருவாக்குகின்றோம். ஆனால், அதில் எத்தனை சட்டங்கள் நடைமுறையிலிருக்கின்றன என்பது
தொடர்பில் நாங்கள் சற்றுச் சிந்திக்கவேண்டும். குறிப்பாக ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும்
ஆளுங்கட்சியினரால் அரச வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன; அரச அதிகாரிகள்
பயன்படுத்தப்படுகின்றார்கள். இப்படிப் பயன்படுத்தப்படுகின்றபோது எப்படிச் சரியான முறையில்
தேர்தல் நடைபெறும்? இவ்வாறு அரச வாகனங்கள் பயன்படுத்தப்படுவதையும், அரச அதிகாரிகள்
பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படுவதையும் ஊடகங்கள் வெளியில் கொண்டுவராததற்குக்
காரணம், அவர்களுடைய மனதளவில் இருக்கின்ற அச்சமே என்று நான் இந்தச் சபையில்
சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
என்னைப் பொறுத்தளவில், தேர்தல் காலங்களில் ஊடகவியலாளர்களைச் சுயமாகச்
செயற்படவிட்டால், அவர்களை ஆளும் கட்சியினர் அடக்கி ஆளுகின்ற, அச்சுறுத்துகின்ற
நிலைமை இல்லாவிட்டால், உண்மைத்தன்மையுள்ள, உண்மையில் மக்களை நேசிக்கின்ற,
உண்மையில் மக்களுக்குச் சேவை செய்கின்ற உறுப்பினர்கள் தேர்தல்களில்
தெரிவுசெய்யப்படுவார்கள் என்பதை நான் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
2009ஆம் ஆண்டு எங்களுடைய பிரதேசங்களில் மிகப் பெரிய யுத்தம் நடைபெற்றது. அந்த
யுத்தத்தில் சர்வதேசச் சட்ட விதிகளுக்கு முரணனான வகையில் எங்களுடைய மக்கள் மிகக்
கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அந்த நேரத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த 'சனல் 4' என்கின்ற
ஊடகம் இதன் உண்மைத் தன்மையை வெளியில் கொண்டுவருவதற்கு முயற்சி செய்தது. அதில்
ஒருசில விடயங்களில் வெற்றியும் கண்டது. அதற்காக இந்தச் சந்தர்ப்பத்தில் எங்களுடைய தமிழ்
மக்கள் சார்பாக 'சனல் 4' தொலைக்காட்சிக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆனால், இந்த 'சனல் 4' ஊடகம் மேற்கொண்ட உண்மைத் தன்மையைக் கண்டறிகின்ற செயலை
ஏன் இலங்கையிலே இருக்கின்ற ஊடகங்கள் மேற்கொள்ள முயற்சிக்கவில்லை என்று நான் இங்கு
கேட்க விரும்புகின்றேன். ஊடகங்களுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்தான்
அதற்குக் காரணமாக இருந்திருக்கும். அதாவது இலங்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப்
பிரித்தானியாவில் இருக்கின்ற ஊடகம் தங்களுடைய தொலைக்காட்சிமூலம் வெளியில்
கொண்டுவருவதற்குக் காரணம் இங்குள்ள சகல ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்
இயங்கியமையாகும் என்பதை நான் இந்த நேரத்திலே குறிப்பிட வேண்டும்.
விடுதலைப் புலிகளின் ஊடகவியலாளராகவிருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இசைப்பிரியா
என்ற இளம் பெண் ஊடகவியலாளர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு மிகக்
கொடூரமானமுறையில் கொலை செய்யப்பட்டார். இந்த உண்மையை 'சனல் 4' தொலைக்காட்சி
உலகம் எங்கும் வெளியிட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் ஊடகவியலாளராகவிருந்த
ஒரேயொரு காரணத்துக்காக இந்தக் குடும்பப் பெண்மணி இவ்வாறு கொடூரமான முறையில்
கொல்லப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அதேநேரத்தில் நான் குறிப்பிட விரும்புவது ஊடகம் என்பது இந்த நாட்டை வழிநடத்துகின்ற
ஒன்றாகும். அந்த வகையில் தேர்தல் காலச் செயற்பாடுகளாக இருக்கலாம், அமைச்சரவை
எடுக்கின்ற தீர்மானங்களாக இருக்கலாம், ஒவ்வோர் அமைச்சர்களும் மேற்கொள்கின்ற
செயற்பாடுகளாக இருக்கலாம், பிரதம அமைச்சர் அவர்களோ ஜனாதிபதி அவர்களோ
முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவை பற்றிய
செய்களை ஊடகமானது உண்மைத் தன்மையுடன் வெளிக்கொணர வேண்டும்.
ගරු මූලාසනාරූඪ මන්ත්රීතුමා
(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)
(The Hon. Presiding Member)
Hon. Member, please wind up now.
ගරු ඉ. චාල්ස් නිර්මලනාදන් මහතා
(மாண்புமிகு இ. சாள்ஸ் நிர்மலநாதன்)
(The Hon. I. Charles Nirmalanathan)
Sir, give me one more minute, please.

Okay.
ගරු ඉ. චාල්ස් නිර්මලනාදන් මහතා
(மாண்புமிகு இ. சாள்ஸ் நிர்மலநாதன்)
(The Hon. I. Charles Nirmalanathan)
ஊடகங்கள் அப்படிச் செயற்படுகின்றபோதுதான் மக்கள் உண்மைத் தன்மையைச் சரியான
முறையில் கண்டறிகின்ற நிலைமை வரும்.
தேர்தலில் காலங்களில் ஊடகவியலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் ஒரு
கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை நான் இந்த நேரத்திலே ஓர் ஆலோசனையாக
முன்வைக்கின்றேன். உண்மையில் என்ன நடக்கின்றது என்பதைத் தேர்தல் ஆணையாளர்
வெளியில் சொல்லத் தயங்கினாலும் அப்படி ஒரு கட்டமைப்பு இருக்கின்றபோது மட்டும்தான் அவர்
அதனை அறிந்து கொள்ள முடியும். தேர்தல் ஆணையாளருக்கும் ஊடகவியலாளர்களுக்கும்
இடையில் இவ்வாறான ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் அது வருங்காலத்தில் மக்கள்
உண்மையான முறையில் தேர்தலைச் சந்திப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்று கூறி,
விடைபெறுகின்றேன். நன்றி.

Reviewed by NEWMANNAR
on
June 26, 2016
Rating:
No comments:
Post a Comment