மன்னார் உதைபந்தாட்ட லீக்கிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு கண்டனம்.
-இவ்விடையம் குறித்து மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
-கடந்த 02.06.2016 அன்று எமது லீக்கினால் நடாத்தப்பட்ட மின்னொழியிலான உதைபந்தாட்டப் போட்டியில் பள்ளிமுனை சென் லூசியா விளையாட்டுக்கழகம், விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக்கழகம் ஆகியன மோதியது.
-இதன் போது ஆரம்பத்திலிருந்தே பள்ளிமுனை ஆதரவாளர்கள் மது போதையில் நின்று உதவி நடுவர் திரு அமலன் அவர்களை தீய வார்த்தையினால் பேசி போட்டியை நடாத்த முடியாமல் குழப்பிக்கொண்டிருந்தனர்.
இருந்தும் தோட்டவெளி கழக உறுப்பினர்களின் ஆதரவுடன் போட்டி நடாத்தி முடிக்கப்பட்டது.
போட்டி முடிவடைந்ததும் மைதானத்திலிருந்து நடுவர்கள் வெளியே வந்து கொண்டிருக்கையில் ஊர் ஆதரவாளர்களும் விளையாட்டு வீரர்களும் குமிந்து நடுவர் அமலன் அவர்களை தள்ளிவிட்டு முதுகில் அடித்தனர்.
எல்லோரும் குவிந்து நின்று அடித்ததால் இனங்காட்ட முடியவில்லை.
இருந்தும் கோல் காப்பாளர் அடித்ததை கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தது.உடனே ஒழுங்கமைப்புக் குழுவினர் யாவரும் உடனே உள்ளே ஓடிச்சென்று நடுவரை பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.
அது மட்டுமல்லாது அலுவலகத்திற்கு முன்னால் வந்து குவிந்து மிக கேவலமான தீய வார்த்தைகளால் அவமானப்படுத்தினர்.
இது விளையாட்டுத்துறைக்கும் உதைபந்தாட்டத்திற்கும் பொருந்தாத மிக மோசமான கண்டிக்கத்தக்க செயலாகும்.
இதன் பின்னர் கூடிய எமது லீக்கின் நிர்வாக சபையானது கடுமையான தண்டனை வழங்க தீர்மானித்தாலும் எதிர்கால வீரர்களின் நலனைக்கருத்தில் கொண்டு மிக குறைந்த தண்டனையாக 6 மாத கால தடையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
நடுவரை தாக்கியதற்காகவும் அலுவலகத்தில் இருந்த நிர்வாகத்தினரை அவமதித்ததற்காகவும் கழகத்தின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க லீக்கின் யாப்பின்படி முழு அதிகாரமுண்டு.
தங்களின் அநாகரிக செயலை மூடி மறைக்க நேற்று வெள்ளிக்கிழமை(10) இவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட செயலையும் லீக் வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்ககையை எடுக்க ஆயத்தமாகவுள்ளது.
கழகத்தின் நற்பெயருக்காக நடுவரை தாக்கியதற்கு லீக் சட்ட நடவடிக்கை எடுக்காதது தவறு என இப்போது உணருகின்றது.
அதுமட்டுமல்லாது லீக்கில் பதிவுசெய்யப்பட்ட 28 கழகங்களில் 27 கழகங்கள் லீக்கின் சட்டதிட்டங்களுக்கு ஒத்துப்போக இக்கழகம் மாத்திரம் தன்னிச்சையாக செயற்பட முனைவது பொருத்தமற்றது.
லீக்கின் சட்டதிட்டங்களுக்கு ஒத்துப்போகாத கழகத்தை லீக்கிலிருந்து விலக்குவது தொடர்பாக 27 கழகங்களும் விரைவில் கூடி தீர்மானம் நிறைவேற்றவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
லீக்கானது சகல கழகங்களுக்கும் ஒரே மாதிரயான முடிவையே எப்போதும் எடுக்கும். எடுத்துக்கொண்டும் இருக்கிறது.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
தகவல்
லீக் நிர்வாகம்.
மன்னார் உதைபந்தாட்ட லீக்கிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு கண்டனம்.
Reviewed by Admin
on
June 11, 2016
Rating:

No comments:
Post a Comment