யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்!
மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் என்பவரே புதிதாக நியமனம் பெற்றவராவார்.
இன்றைய தினம் சனிக்கிழமை காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சர்வமத ஆசிர்வாதத்துடன் தனது கடமையை பொறுப்பேற்றார்.
இலங்கை முழுமைக்குமான ஒழுக்கம் நன்னடத்தைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் 34 வருடங்களிற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் கடந்த 1982ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றியிருந்தார்.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1984ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் முதலாவது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஐ.ரி.கனகரட்னத்தின் மருமகனே ஸ்ரனிஸ்லஸ் ஆவார்.
இவர் பொலிஸ் சேவையில் 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்!
Reviewed by NEWMANNAR
on
June 11, 2016
Rating:

No comments:
Post a Comment