அண்மைய செய்திகள்

recent
-

25 ஆண்டுகளாக போராடும் தாயின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்- நடிகர் சத்யராஜ்


மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என சென்னையில் பேரணியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார். மகனின் விடுதலைக்காக 25 ஆண்டுகாலமாக போராடும் தாயின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்றும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி தொடங்கியது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் பல்வேறு தரப்பினர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து நடைபெற்ற பேரணியில் நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஜனநாதன், விக்ரமன், கௌதமன், மதிமுகவின் மல்லை சத்யா, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சங்கத்தலைவர் நாசர், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பண்ருட்டி தி. வேல்முருகன், கொளத்தூர் மணி உள்ளிட்ட பல இயக்கங்களின் தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த பேரணியில் பங்கேறுள்ள அனைவரும் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

கடந்த 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

25 ஆண்டுகாலமாக மகனின் விடுதலைக்காக கண்ணீருடன் போராடி வரும் அற்புதம் அம்மாளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.

இந்த 7 தமிழர்களின் விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் சத்யராஜை போல, நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் சிறையில் தவிக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
25 ஆண்டுகளாக போராடும் தாயின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்- நடிகர் சத்யராஜ் Reviewed by NEWMANNAR on June 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.