மன்னாரில் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்த வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா (படம்)
வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தனது பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு உதவித்திட்டங்களை இன்று (1) புதன் கிழமை மன்னாரில் வழங்கி வைத்துள்ளார்.
அதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் தொழில் துறை திணைக்களத்தில் புதன் கிழமை மாலை இடம் பெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா அவர்களுடன் இணைந்து மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், தொழில் துறை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இணைந்து தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு சுய தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.
அதே வேளை மன்னார் பெரியகமம் விளையாட்டுக்கழகத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு சீருடையினை வடமாகாண சபை உறுப்பினர் வழங்கி வைத்தார்.
இதன் போது மன்னார் பிரதேச விளையாட்டுத்துறை அதிகாரி ஜேரோமி மற்றும் விளையாட்டுக்கழக வீரர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் மன்னார் சௌத்பார் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது பங்குத்தந்தை நேரு அடிகளார் இணைந்து வடமாகாண சபை உறுப்பினருடன் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்த வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா (படம்)
Reviewed by NEWMANNAR
on
June 02, 2016
Rating:

No comments:
Post a Comment