அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முசலியில் இடம் பெற்ற சர்வதேச புகைத்தல்,மது எதிர்ப்பு தின நிகழ்வு-Photos


புகைத்தலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்குடன் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சு மே 31 தொடக்கம் ஜுன் 12 வரை நாடு முழுவதும் எதிர்ப்பு தினமாக பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடாத்தி வருகின்றனர்.

-அதனடிப்படையில் முசலி பிரதேச வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி கிளையின் ஏற்பாட்டில் இன்று புதன் கிழமை காலை முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் தலைமையில் முசலி பிரதேசத்திற்கான புகைத்தல்,மது எதிர்ப்பு தின நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கபட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முசலி பிரதேசச் செயலாளர்,,,

முசலி பிரதேசத்தில் உள்ள இளைஞர்களை கல்வியில் உயர்த்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கமாக இருக்கின்றது.

எனது பிரதேசத்தில் வசிக்கின்ற குடும்பங்களின் இரண்டு விடயங்களை பற்றி மிகவும் முக்கியமாக எந்த நாளும் யோசிக்கின்றேன்.

குறிப்பாக நாளாந்தம் ஒவ்வெரு குடும்பங்களும் பசி,பட்டினி இல்லாமலும்,பாடசாலை செல்ல கூடிய வயதுடைய இளையவர்கள் யாரும் இருந்தால் அவர்களை கல்வி கூடங்களுக்கு அனுப்பி கல்வி மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று நான் நாளாந்தம் யோசிக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த வருடம் புகைத்தல்-மது எதிர்ப்பு தினத்தில் சேமித்த பணத்தில் முசலி பிரதேசத்தில் வறுமைக்கோட்டில் வாழும் பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்வி நிலையினை உயர்த்தும் நோக்குடன் 95 மாணவர்களுக்கு புலமைபரிசில் வழங்கி வைக்கபட்டதுடன் கடந்த வருடம் கிராம மட்டங்களில் புகைத்தல்,மது சேமிப்பு பணங்களை அதிகமாக சேமித்த பத்து (10) வாழ்வின் எழுர்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.








மன்னார் முசலியில் இடம் பெற்ற சர்வதேச புகைத்தல்,மது எதிர்ப்பு தின நிகழ்வு-Photos Reviewed by NEWMANNAR on June 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.