வடமாகாணம் தழுவிய ரீதியில் நாளை முதல் தனியார் போக்குவரத்துச் சேவைகள் பணிப்பகிஸ்கரிப்பு.
பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு தனியார் போக்குரத்துச் சேவைகள் நாளை திங்கட்கிழமை(27) முதல் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வடையம் குறித்து வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரங்களில் மேலும் குறிப்பிடுகையில்,,,
தனியார் பேரூந்திற்கு 60 வீதமும்,இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பேரூந்திற்கு 40 வீதமும் என்ற விகிதாசாரத்தில் கடந்த 3 வருட கால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவை இதற்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அத்துமீறிய சேவையினை மேற்கொண்டு வருகின்றது.
இவ்விடையம் தொடர்பாக மத்திய அரசுடனும்,மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எதுவித பலனும் இதுவரை எமக்கு எட்டப்படவில்லை.
இதனால் எமது பயணிகளின் பாதுகாப்பான பயணத்தினை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை(27-06-2016) தொடக்கம் எமக்கு தீர்வு கிடைக்கும் வரை வடமாகாணம் முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளோம் என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்-
(26-06-2016)

Reviewed by NEWMANNAR
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment