அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வருமாறு அழைப்பு!
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (CID) விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி விசாரணை ஒன்றிற்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றயை தினம் மட்டக்களப்பு இல்லத்திற்கு வருகை தந்த பொலிசார் தனக்கான அழைப்பாணையை வழங்கிச் சென்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தன்னை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் எதற்காக அழைத்துள்ளார்கள் என்பது தனக்கு தெரியாது எனவும் கடந்த காலங்களிலும் இது போன்று பல தடவைகள் தன்னை கொழும்பிற்கு விசாரணைக்காக இவர்கள் அழைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வருமாறு அழைப்பு!
Reviewed by NEWMANNAR
on
June 24, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 24, 2016
Rating:


No comments:
Post a Comment