கச்சத்தீவு விவகாரம்: ஜெயலலிதாவின் கருத்துக்கு கருணாநிதி கண்டனம்
கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா அளித்தது தொடர்பான விவகாரத்தில், நேற்று (திங்கள் கிழமை) சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
நேற்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு அளித்தபோது, மாநில முதல்வராக இருந்த கருணாநிதி நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையென்றும், போராட்டங்களை நடத்தவில்லையென்றும் கூறினார்.
தற்போது மீனவர்கள் படும் அல்லல்களுக்கெல்லாம் திமுக தான் காரணம் என்றும் குறிப்பிட்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, 1974-ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
1974 ஜூன் 27ஆம் தேதி கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு அளிப்பது தொடர்பாக அறிவிப்பு வந்ததாகவும், பத்திரிகைகளில்தான் இதைப் பார்த்து தான் பதறிப் போய் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்து பேசியதாகவும் கருணாநிதி கூறியிருக்கிறார்.
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததை தான் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும், தன்னால் முடிந்த அளவுக்கு அதற்காக போராடியிருப்பாதகவும் கூறியிருக்கும் கருணாநிதி, கச்சத்தீவின் மீது இலங்கைக்கு இருக்கும் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளலாம் என முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு கடிதம் எழுதியதாக கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று தமிழக சட்டப்பேரவையில் ஆளும் அதிமுகவிற்கும், எதிர்க்கட்சியியான திமுகவிற்கும் இடையில் கடுமையான மோதல் நடைபெற்றது.
கச்சத்தீவு விவகாரம்: ஜெயலலிதாவின் கருத்துக்கு கருணாநிதி கண்டனம்
Reviewed by NEWMANNAR
on
June 21, 2016
Rating:

No comments:
Post a Comment