அண்மைய செய்திகள்

recent
-

'தொழில்களுக்கு கௌரவமாகத் திரும்புவோம்' அரச துறை ஆசிரியர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில்விசேட நிவாரணப் பொதிகள்

வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட அரசாங்க பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானவிசேட நிவாரணப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (16ம் திகதி) பி.ப.2:00 மணிக்கு அகில இலங்கைஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் (ACJU) இடம் பெற்றது. இந் நிகழ்வில் ACJU சபைத் தலைவர் முப்திறிஷ்வி, செயலாளர் அஷ்சேய்க் முபாறக், பொருளாளர் மௌல.கலீல், IBA அமைப்பின் செயலாளரும்ஜம்இய்யதுல் உலமா கல்விப்பிரிவின் வளவாளருமான சகோ. நமீஸ், RCC இணைப்பாளர் அஸ்கர் கான் மற்றும்முஸ்லிம் எய்ட் பணிப்பாளர் பைசர் கான் ஆகியோர் பங்கேற்றனர்.
'தொழில்களுக்கு கௌரவமாகத் திரும்புவோம்' என்ற தொணிப்பொருளில் கீழ் மேற்படி நிவாரணப் பொதிவினியோகம் நடைபெற்றது. சிறிலங்கா முஸ்லிம் கலாசார நிலையம் - ஹரோ (UK), IBA (UK) ஆகியஅமைப்புகளின் அநுசனையுடனும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, RCC என்பவற்றின் ஒருங்கிணைப்பில்முஸ்லிம் எய்ட் இவ் வினியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக அரச பாடசாலை ஆசரியர்களுக்கான பொதிகள் நேற்று வினியோகிக்கப்பட்டன.உடைகள், உடமைகளை இழந்து நிற்கும் இவ் ஆசிரியர்கள் கௌரவமாக தமது பணிகளுக்குச் திரும்பிச்செல்வதற்கு அத்தியாவசியமான உடைகள், பாதணிகள் மற்றும் கைப்பைகள் என்பவை உடனடித் தேவையாகஇருப்பதனால் இவற்றை உள்ளடக்கியதாக இப் பொதிகள் அமையும்.
அண்மைய வெள்ள அனர்த்தம் காரணமாக பல்லாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு பல்வேறுவகையான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களில் அரச மற்றும்தனியார் துறைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்களின் நிலை மிகவும்கவலைக்கிடமானது. குறைந்தபட்ச மாதாந்த வருமானத்தைக் கொண்டு தமது வாழ்க்கைச் செலவினைஈடுசெய்வதே சவாலாக இருந்த இவர்களுக்கு வெள்ள அனர்த்தம் விளைவித்த இழப்பு மேலும் அவர்களைநிலை குலையச் செய்து விட்டது. இப்படிப்பட்டவர்கள் கௌரவமாக தமது தொழில்களையும் பணிகளையும்மீளத் தொடங்க இந்நிவாரணப் பொருட்கள் உதவும் என்பது இத்திட்டத்தின் பங்காளர் அமைப்புகளானபிரித்தானிய ஹரோ வைத் தளமாகக் கொண்டு செயற்படும் சிறிலங்கா முஸ்லிம் கலாசார நிலையம், IBA (UK) அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, முஸ்லிம் எய்ட் ஆகிய அமைப்புகளின் நம்பிக்கையாகும். .



'தொழில்களுக்கு கௌரவமாகத் திரும்புவோம்' அரச துறை ஆசிரியர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில்விசேட நிவாரணப் பொதிகள் Reviewed by NEWMANNAR on June 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.