பிரபல குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலிக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி!
உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மொஹமட் அலிக்கு இறுதி அஞ்சலி செலத்துவதற்காக பல்லாயிரக் கணக்கானோர் அவரின் பிறப்பிடமான அமெரிக்காவின் கென்டகி நகருக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி அமெரிக்காவின் கென்டகி பிரதேசத்தில் பிறந்த மொஹமட் அலி குத்துச்சண்டை உலகில் அழியாநாமத்தைப் பதிவு செய்து கடந்த 04 ஆம் திகதி மீளாத் துயில் கொண்டார் .
இவரின் மறைவையடுத்து உலகவாழ் குத்துச்சண்டை ரசிகர்கள் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
பல இடங்களில் குத்துச்சண்டை கையுறைகள் தொங்கவிடப்பட்டு அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை மொஹமட் அலி தனது சிறு வயதில் வசித்த வீட்டின் அருகே, அவரது ரசிகர்கள் நினைவுச் சின்னங்களை வைத்து தமது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, அவரது சகோதரர் ரஹ்மான் அலி, தனது சகோதரர் குத்துச்சண்டையில் மட்டுமல்லாது அனைத்துத் திறமைகளிலும் பிரகாசித்திருந்ததாக சர்வதேச ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
பிரபல குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலிக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி!
Reviewed by NEWMANNAR
on
June 07, 2016
Rating:

No comments:
Post a Comment