கொஸ்கம வைத்தியசாலைக்கு தற்காலிக வெளிநோயாளர் பிரிவு
கொஸ்கம இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்ட கொஸ்கம வைத்தியசாலையில் தற்காலிக வெளிநோயாளர் பிரிவை அமைப்பதற்கு சுகாதார தரப்பு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் தான் உள்ளிட்ட வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவினருக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக இந்த வைத்தியசாலையில் தலைமை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு யாரும் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை என்றும், நோயாளிகளின் தேவைக்கு அமைய வைத்தியசாலையை செயல்படுத்துமாறும் அதிகாரிகள் பணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் வைத்தியசாலையின் நிர்வாகனத்தினர் 7பேரும், நோயாளிகள் 10 பேர் இருந்ததாகவும், அவர்களுக்கு இதனால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொஸ்கம வைத்தியசாலைக்கு தற்காலிக வெளிநோயாளர் பிரிவு
Reviewed by NEWMANNAR
on
June 07, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 07, 2016
Rating:


No comments:
Post a Comment