அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் இடம்பெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிக்கான குழு நியமனம்...


இந்த வருடத்திற்கான தேசிய விளையாட்டுப் போட்டியானது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் தலைமையின் கீழ் இன்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேசிய விளையாட்டுப் போட்டியானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நகரங்களை மையப்படுத்தி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கூடைப்பந்து, கடற்கரை கபடி, கடற்கரை கரப்பந்து , கெரம், செஸ், கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகள் யாழ் நகரில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சியில் நீச்சல் மற்றும் தடகளப் போட்டிகள் நடாத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இடம்பெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிக்கான குழு நியமனம்... Reviewed by Author on June 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.