கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த மீனவர்கள் ஐவர் கடற்படையினரால் கைது
கிளிநொச்சி பள்ளிக்குடா பகுதியில் சட்ட விரோதமாக கடலட்டைகளைப் பிடித்துக்கொண்டிருந்த ஐந்து இலங்கை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படைப் பிரிவைச் சேர்ந்த மண்டைத்தீவு கடற்படையினால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இதன் போது மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு சிறிய படகுககள் மற்றும் கடலட்டைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சந்தேகநபர்கள் பூநகரி கடற்றொழில் ஆய்வு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த மீனவர்கள் ஐவர் கடற்படையினரால் கைது
Reviewed by NEWMANNAR
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment