அண்மைய செய்திகள்

recent
-

அரசாங்கத்துடன் பேச த.தே.கூட்டமைப்பு முடிவு பங்காளி கட்சிகளை இணைத்து 8பேர் கொண்ட குழுவும் அமைப்பு


தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டுள்ளது. பங்காளிக் கட்சிகளின் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுடனான பேச்சு வார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்படும் என உறுதியளித்தார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று எதிர்க்கட் சித் தலைவர் அலுவலகத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைமைப்பிடத்தினர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

நீண்ட நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இந்தக்கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலம்புரிக்கு தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் இன்று (நேற்று) ஒரு கூட்டம் இடம்பெற்றது இதில் பாராளுமன்ற அரசியல் சாசன சபையில் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பது பற்றி சம்பந்தன் கொஞ்சம் சொன்னார்.முக்கியமாக தேர்தல் முறைமைகளை மாற்றியமைப்பதற்கு எப்படியான பேச்சுவார் த்தைகள் நடைபெறுகின்றன என்பது பற்றி சொன்னார்.

அதில் தொகுதி வாரியான விகிதாசார முறையில் 50:50 என்ற முறையிலான அல்லது 60:40 என்ற முடிவுக்கு இன்னும் வரவில்லை என்றும் அது சம்பந்தமாக தேர்தல் முறைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துச் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

இவ்வாறு கூறியதோடு இத்தகைய விடயங்கள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் தான் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதற்குப் பின்னர் ஜனாதிபதி முறையை மாற்றுவது குறித்து பேசப்படும் என்றும் கூறினார்.

இது தொடர்பான குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும் என்றும் கூறினார்.
அப்போது நான்தான் கேட்டேன். நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல முக்கியமான விடயங்களை குறிப்பிட்டுள்ளோம்.

01.வடக்குக் கிழக்கு இணைப்பு
02.சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வைத்தல்.
03.தமிழ் மக்களின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவற்றின் அடிப்படையிலான ஒரு அதி காரப் பகிர்வைப் பற்றி பேசப்போகின்றோமா? அல்லது ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர் வைப்பற்றி பேசப்போகின்றோமா? ஏன் என்று சொன்னால் நாங்கள் திட்டவட்டமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றை ஆட்சிக்குள்தான் நிற்கின்றனர் என்று குறிப்பிட் டேன். இதன்போது ஏனைய கட்சியினரும் இந்த விடயங்கள் சம்பந்தமாக கட்டாயம் அர சாங்கத்தோடு ஒரு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இந்த அடிப்படை விடயங்கள் சம்பந்தமாக அரசுடன் நிச்சயம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எல்லாத் தரப்பாலும் வலியுறுத்தப்பட்டது.ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ, மாவையும் (இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் ) ஏற்றுக்கொண்டார்.

அதன் பிரகாரம் மைத்திரி தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்ப ட்டுள்ளது. அதுமட்டுமன்றி 8பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியிலிருந்து மாவையும், சுமந்திரனும், ஈ.பி.ஆர்.எல்.எப்லிருந்து நானும் சிவசக்தி ஆனந்தனும், ரெலோவிலிருந்து ஸ்ரீகாந்தாவும் செல்வம் அடைக்கலநாதனும், புளொட்டிலிருந்து சித்தார்த்தனும் ஆராரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்த அரசியல் சாசன விடயங்கள் பற்றி பேசுவார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் இவர்கள் இந்த விடயங்கள் பற்றி பேசுவார்களா? இல்லையா ? என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஏனெனில் ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு எந்தவொரு நடைமுறைக்கும் வரவில்லை அதற்குள் இன்னொரு குழுவா? என்று கேட்டோம்.

இருப்பினும் குழு அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இதுவந்து கூட்டத்திற்குச் செல்லும் போது ஆட்களைத் திருப்திப்படுத்த அமைக்கப்படும் குழுக்களாகத்தான் இருக்கிறது.
மற்றும்படி இது நடைமுறைக்குவருமா? என்று தெரியவில்லை. ஆனால் எல்லாக்கட் சிகளும் ஒரு விடயத்தை வலியுறுத்தின.

அரசியல் தீர்வு குறித்து அரசுடன் கூட்ட மைப்பு பேச வேண்டும் என்று அதுமட்டுமன்றி காணி விடுவிப்பு, காணாமற் போனவர்கள் விவகாரம் என்பது பற்றியும் பேசவேண்டி உள்ளது என வலியுறுத்தப்பட்டது.
அதனை சம்பந்தனும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது எமக்குத் தெரியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் பேச த.தே.கூட்டமைப்பு முடிவு பங்காளி கட்சிகளை இணைத்து 8பேர் கொண்ட குழுவும் அமைப்பு Reviewed by NEWMANNAR on June 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.