சாதனை படைத்த டோனி....
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மேலுமொரு புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 350 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதிய மைல்கல் சாதனையை மகேந்திரசிங் டோனி நிகழ்த்தியுள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஹராரேவில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பும்ரா பந்துவீச்சில் எல்டன் சிகும்பராவின் கேட்சை பிடித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 350 விக்கெட்கள் வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை டோனி பெற்றுள்ளார்.
இந்த மைல்கல்லை எட்டும் முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோனி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் இலங்கை வீரர் சங்ககாரா முதலிடத்தில் உள்ளார். 404 போட்டிகளில் பங்கேற்றுள்ள சங்ககாரா, 383 கேட்ச்கள், 99 ஸ்டெம்பிங்கள் என 482 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 472 விக்கெட்களுடன் 2ம் இடத்திலும், தென்னாப்ரிக்காவின் பவுச்சர் 424 விக்கெட்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் டோனி 4ம் இடத்தை பிடித்துள்ளார்.
சாதனை படைத்த டோனி....
Reviewed by Author
on
June 16, 2016
Rating:

No comments:
Post a Comment