அண்மைய செய்திகள்

recent
-

சந்திமால் அபார சதம்: அயர்லாந்துக்கு 304 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை....


இலங்கை- அயர்லாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி டப்லினில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களாக குஷால் பெரேரா, குணத்திலக களமிறங்கினர். குணத்திலக 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

மற்றொரு தொடக்க வீரரான குஷால் பெரேரா 32 ஓட்டங்களில் வெளியேறினார். இதன் பின்னர் குஷால் மெண்டிஸ், சந்திமால் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர்.

இதனால் இருவரும் அரைசதம் கடந்தனர். குஷால் மெண்டிஸ் 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் சந்திமாலுடன் இணைந்த அணித்தலைவர் மேத்யூஸ் நிதானத்தை தொடர, மறுமுனையில் அசத்திய சந்திமால் சதம் விளாசினார்.

மேத்யூஸ் 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். கடைசி நேரத்தில் தசன் ஷனக அதிரடி காட்டி 19 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து வந்த பிரசன்னா (0), உபுல் தரங்கா (7), தனன்ஜெய (3) ஆகியோர் சொற்ப ஓட்டங்களே எடுத்தனர்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சந்திமால் 107 பந்தில் 100 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 303 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சந்திமால் அபார சதம்: அயர்லாந்துக்கு 304 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை.... Reviewed by Author on June 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.