இலங்கை அகதிகள் அவதானம்! ”ஆப்பரேசன் சாத்ராக்” ஆரம்பம்
சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை தமிழ் அகதிகளை கண்காணிக்கும் நோக்கில் ”ஆப்பரேசன் சாத்ராக்” ஒத்திகை இன்று இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவான இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 14 தமிழ் அகதிகளை கன்னியாகுமரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை தமிழ் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை ”ஆப்பரேசன் சாத்ராக்” என்ற நாமத்தோடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்த இக்கண்காணிப்பு பணிகளில் கடலோர பாதுகாப்பு பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் அகதிகளை அழைத்து செல்லும் படகினை கண்டால் 1093 என்ற அவசர இலக்கத்துக்கு அழைத்து தெரிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அகதிகள் அவதானம்! ”ஆப்பரேசன் சாத்ராக்” ஆரம்பம்
Reviewed by Author
on
June 30, 2016
Rating:

No comments:
Post a Comment