திருகோணமலையில் பயனாளிகளுக்கு வழங்கப்படவிருந்த மீன்பிடி வலைகளைகளை திருடியவர் விளக்கமறியலில்.
பயனாளிகளுக்கு வழங்கப்படவிருந்த மீன்பிடி வலைகளைத் திருடிய கடற்றொழில் - நீரியல் வளங்கள் திணைக்களத்தின் திருகோணமலை உதவிப் பணிப்பாளரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, நேற்று வியாழக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய உபாலி சமரதுங்க (வயது 45) எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மீன்பிடித் திணைக்களத்தில் மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருந்த 04 இலட்சத்தி 26ஆயிரம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் களஞ்சியசாலையிலிருந்து திருடப்பட்டிருப்பதாக களஞ்சியப் பொறுப்பாளரினால் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் உதவிப் பணிப்பாளரினால் அவை திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து பொதுச் சொத்துக்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலையில் பயனாளிகளுக்கு வழங்கப்படவிருந்த மீன்பிடி வலைகளைகளை திருடியவர் விளக்கமறியலில்.
Reviewed by Author
on
June 17, 2016
Rating:

No comments:
Post a Comment