டாக்டர் அப்துல்கலாமின் திருவுருவ சிலை திறப்பு....
இந்தியா நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும், அணு விஞ்ஞானி யுமான டாக்டர் அப்துல்கலாமின் திருவுருவ சிலை யாழ்.பொதுநூலகத்தில் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அப்துல்கலாமின் திரு உருவ சிலையை இலங்கைக்கான இந்திய உயஸ்த்தானிகர் வை.கே சிங்ஹா மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆகியோர் இணைத்து திறந்துவைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொள்வார் என கூறப்பட்டிருந்த நிலையில் ஐனாதிபதி பின்னர் கலந்து கொள்ளவில்லை என்பதும் இங்கே குறிப்பிட்டத்தக்கதாகும்.
டாக்டர் அப்துல்கலாமின் திருவுருவ சிலை திறப்பு....
Reviewed by Author
on
June 17, 2016
Rating:

No comments:
Post a Comment