இன்றைய (19-07-2016) கேள்வி பதில்
கேள்வி:−
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சட்டத்தரணி சுதன் அண்ணா.நான் தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவி றிஷானா(கட்டாயம் எனது பெயரை போடவும்)அண்ணா! கற்பு என்றால் என்ன?அது பெண்களுக்கு மட்டும்தானா?அது ஒழுங்கத்தினை குறிப்பதாயின், ஒழுக்கத்திற்கு இலக்கணமான சமய தலைவர்கள் கற்பானவர்களா?அவ்வாறாயின் ஏன் பெண் பிள்ளைகளை சுமையாக நினைக்கின்றனர்?
பதில்:−
அன்பான சகோதரியே!முதலில் நான் தங்களுக்கு தலை வணங்குகிறேன்.தங்களின் பெண் விடுதலைக்கான துணிவினை பாராட்டுகிறேன்.
கற்பு என்பது ஒரு மோசடிச் சொல்லாகும்.இது பெண்களை, ஆண்கள் அடிமைப் படுத்துவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட மத ரீதியான கருத்தாகும்.கற்பு என்பது ஒழுக்க நெறிக்கு உட்பட்டது என்று கூறப்பட்டால் ஆண்-பெண் இருவருக்குமே அது பொதுவானதாகவே இருக்க வேண்டும்.ஆனால், ஆண்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பெண்கள் மீது மட்டுமே சுமத்தப்பட்டுள்ள இது ஒரு மோசடிச் சொல்லாகும்.
பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுப்பதில் உள்ள சிரமங்கள், அதன் பின் அவர்களால் குடும்ப வாழ்வில் ஏற்படும் சிரமங்கள், போன்றவற்றை மனதில் கொண்டு பெண் குழைந்தைகள் பிறந்த உடனோ அல்லது கருவில் உள்ளபோதோ (ஸ்கேன் மூலம் அறிந்து) அழித்து விடுகிறார்கள்.பெண் குழந்தையின் திருமணத்தின்போது திருமணச் செலவுகளை செய்ய வேண்டியதுடன்,ஏராளமான நகைகளையும், பணத்தையும் வரதட்சணையாக கொடுக்க வேண்டியுள்ளது.இத்தகைய வரதட்சணை என்பது சமூக பண்பாடு ஆகும்.இதனை மனதளவில் சுமையாக கருதும் பெற்றோர் பெண்களைப் பெற்றால் "செலவு" என்றும், ஆண்களைப் பெற்றால் ‘வரவு’ என்றும் கணக்கிடுகின்றனர்.இந்த கணக்கீடுதான் பெண்களை சுமையாக கருத இடமளிக்கிறது.இம்மாதிரியான எண்ணம் தோன்றுவதற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்.
பெற்றோர்கள் தாம் நினைக்கும் தமது சாதி(இனம்)பையனுக்கு அவன் கேட்கும் எல்லாவற்றையும் வரதட்சணையாக கொடுத்து பெண்ணையும் திருமணம் செய்து வைக்கின்றனர். பெண்ணின் திருமண வயதில் பொறுப்புடன் மாப்பிள்ளைகளைத்தேடும் பெற்றோர்,தமது பெண் குழந்தைகளை இளவயதிலேயே சொந்தக்காலில் நிற்கவும்,சுயமாக சிந்திக்கவும்,சிக்கலான நேரங்களில் தைரியமாக முடிவெடுக்கவும் அவர்களை தயார் செய்ய வேண்டும்.ஆனால் அவ்வாறு செய்வதில்லை.மேலை நாடுகளில் பெண்களே தங்களுக்கு ஏற்ற துணையை தேர்வு செய்கிறார்கள்.
இன்று படிப்பிலும்,வேலையிலும் முன்னணியில் இருப்ப வர்கள் பெண்களேயாவர்.படித்து வேளையில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ளவே ஆண்கள் போட்டி போடு கிறார்கள்.மேலும் படித்து தம்மை வளர்த்துக்கொண்ட பெண்கள் முன்பைவிடத் துணிச்சலாக தமக்கு பிடிக்காத கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார்கள்.மேலும் பெண்கள் தனியாக வாழ வசதியாக விடுதிகளும் தற்போது உள்ளன.
மேற்கூறிய பெண்களின் பிரச்சனைகளில் இருந்து பெற்றோர்களும்,பெண்களும் விடுபட முயற்சி செய்ய வேண்டும்.அதை விடுத்து பிறக்க இருக்கும் பெண் குழந்தையை அழிப்பதும், இருக்கும் பெண் குழந்தையை சுமையாக கருதுவதும் தவறான கருத்தாகும்.
எமது சமூக அமைப்பில் ஒரு பெண் திருமணமாகாதவராயிருந்தால் நண்பரிடமும், மணமான வராயிருந்தால் கணவரைத் தவிர்த்த மற்றொருவருடன் தனது பாலியல் தேவையைப்பூர்த்தி செய்து கொண்டால் அல்லது முயற்சித்தால் அவள் "கெட்டுப்போனவள்"என்ற பட்டம் சுமத்தப்படுகிறது.ஆனால்,இதே செயலை ஒரு ஆண் செய்யும் பொழுது,அவனை "கெட்டுபோனவன்" என்று கூறுவதில்லை.
இதற்குக் காரணம் பெண்கள் ஆண்களின் போகப்பொருள் என்ற மத ரீதியலான ஆண் ஆதிக்க கருத்தியல் வெளிப்பாடே ஆகும். பெண்ணடிமைத்தனத்தை வளர்க்கும் இவ்வாறான கூற்று கண்டிக்கத்தக்கது.மாறி வரும் ஒழுக்க காலச்சூழலில் பெண்களுக்குச் சொத்துரிமை,ஆண், பெண்,சமத்துவம் போன்ற பல்வேறு,ஆண்களுக்குரிய அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் இருக்கும் பொழுதுதான்,மேற்சொன்ன நிலை மாறி முற்போக்கான சமூக அமைப்பு உருவாகும்.
என்னை பொருத்தவரை ஒரு சில சமய தலைவர்கள்(பூசாரி,போதகர்,பாதர்,பிக்குனி,உலமாக்கள்)போலியானவர்களே.ஆனால் இவர்கள் இல்லாத ஒழுக்கத்தைப் போதித்து பிழைப்பு நடத்திவருகின்றனர். இவர்கள் மோட்சத்துக்கு வழிகாட்டுகிறேன்,பிள்ளை வரம் தருகின்றேன் என்றெல்லாம் சொல்லி,தன்னிடம் வரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி உடலுறவு கொள்கின்றனர்.பல நேரங்களில் பணம் பறிக்கவும் இவர்கள் தயங்குவதில்லை.பல சமயவாதிகளின் சபைகள்/மடங்கள் (ஆசிரமங்கள்) விபச்சார விடுதிகளாக செயல் பட்டுள்ளது.தற்பொழுது வெளிப்பட்டு வருகிறது.இந்த சமய தலைவர்கள் அனைவரும் மனிதர்களே!.பொதுவாக சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பாலுணர்வு இவர்களுக்கும் இருக்கவே செய்யும்.
மேலும் இவர்கள் அதிகமாக பால்,பழம், போன்ற சத்துள்ள உணவை எடுத்துக் கொள்கின்றனர்.எனவே சாதாரண மனிதர்களை விட இவர்களுக்கு பாலுணர்வு கூடுதலாகவே அமையும் என்பது ஆச்சரியம் இல்லாத உண்மையாகும்.
கற்பு என்பது அது மனசளவில் குற்றம் புரியாது வாழும் மனித ஜீவனையே குறிக்கிறதே தவிர அது வெறும் சதைப் பிண்டத்தினை குறிப்பிடவில்லை.அதைவிடுத்து"வெண்ணிற ஆடையில் திருமணமான ஆண் தன் மனைவியின் பரிசுத்தத்தினை முதல் உறவின் போது கண்டறிவது அவன் அனைவருக்கும் முன்னால் நிர்வாணமாக நிற்பதற்கு சமமாகும்

Reviewed by NEWMANNAR
on
July 19, 2016
Rating:

No comments:
Post a Comment