அண்மைய செய்திகள்

recent
-

ஆற்றில் கவிழ்ந்த படகுகள்: 4 வயது குழந்தை உள்பட இருவர் பலி...


சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது குழந்தை உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Grisons ஏரியில் கடந்த புதன்கிழமை பிற்பகல் வேளையில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவர் படகு சவாரி செய்துள்ளனர்.

நடு ஏரியில் படகு சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மகள் காப்பாற்றப்பட, 75 வயதான தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் மாலை வேளையில் ஜெனிவா ஏரியில் தாய் மற்றும் அவருடைய 4 வயது மகள் படகு சவாரி செய்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத சூழலில் படகு திடீரென கவிழ்ந்துள்ளது. இருவரும் தண்ணீரில் உயிருக்கு போராடுவதை தந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக ஏரியில் குதித்த அவர் மனைவியை காப்பாற்றியுள்ளார். ஆனால், 4 வயதான மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

குழந்தையின் உடலில் பாதுகாப்பு உடை இருந்தபோதிலும், அது சேதாரம் ஆகியிருப்பதால் குழந்தை தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

சுமார் 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு குழந்தையின் உடலை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

படகில் உள்ள காற்றாடிகள் பழுதானதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருவரை பலிக்கொண்டு இந்த படகு விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் கவிழ்ந்த படகுகள்: 4 வயது குழந்தை உள்பட இருவர் பலி... Reviewed by Author on July 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.