அண்மைய செய்திகள்

recent
-

குழந்தை திருமணம் செய்தால் 20 வருடம் சிறை தண்டனை: ஜனாதிபதி ஒரு அதிரடி அறிவிப்பு!


காம்பியா நாட்டில் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் அச்செயலில் ஈடுபடுவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் குழந்தை திருமணம் மிகவும் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

ஐ.நா சபை வெளியிட்ட அறிக்கையில், காம்பியாவில் உள்ள 46 சதவிகித சிறுமிகள் 18 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்துக்கொள்வது தெரியவந்தது.

இந்த தகவலை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதியான Yahya Jammeh ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரமழான் இறுதி நாளில் அவர் பொதுமக்கள் முன்னிலையில் பேசியபோது, ‘இனிவரும் காலங்களில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்யக்கூடாது.

இதனை மீறி திருமணம் செய்பவர்களுக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த திருமணத்திற்கு ஆதரவாக உள்ள பெற்றோர் மற்றும் இமாம்களுக்கும் தண்டனை கிடைக்கும்.

இதனை நடைமுறைப்படுத்தும் புதிய சட்டம் விரைவில் வரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், FGM எனப்படும் பெண் பிறப்புறுப்பு அழித்தல் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

குழந்தை திருமணம் செய்தால் 20 வருடம் சிறை தண்டனை: ஜனாதிபதி ஒரு அதிரடி அறிவிப்பு! Reviewed by Author on July 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.