தமிழ் நேசன் அடிகளாரின் “இரக்கத்தின் இராகங்கள்” இறுவட்டு வெளியீட்டு விழா-முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையம் கலையருவியின் இயக்குனரும் மன்னா பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் எண்ணம் எழுத்துஇயக்கத்தில் உருவாகிய “இரக்கத்தின் இராகங்கள்” இறுவட்டு (சி.டி.) வெளியீட்டு விழா இன்று செவ்வாய்க் கிழமை (19.07.2016) மாலை 3.00 மணிக்கு மன்னார் தாழ்வுபாடு வீதியில் உள்ள குடும்பநலப் பணியக மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இறை இரக்க ஆண்டை முன்னிட்டு இந்த இறுவட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அருட்திரு. டக்ளஸ் மில்ரன் லோகு அடிகளார் தலைமையில் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் கலந்துகொள்ள அருட்திரு. லக்ஸ்ரன் டி சில்வா அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்த. அருட்திரு. அன்புராசா அடிகளார் இறுவட்டின் ஆய்வுரையை நிகழ்த்தினார்.
மாணவர்களின் நடனங்களோடு இறுவட்டடில் உள்ள பாடல்கள் சிலவற்றினை நேரடியாகவே பாடகர்கள் பாட மிகவும் அருமையாக இருந்ததோடு “இரக்கத்தின் இராகங்கள்” இறுவட்டினை முதன்மை விருந்தினரா கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் வெளியீடு செய்யப்பட்டது.
மன்னார் மறைமாவட்டத்தின் நான்கு மறைக்கோட்ட முதல்வர்களும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் ஏனைய பிரமுகர்களும் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாகவும் பொதுநிலையினரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பாக “இரக்கத்தின் இராகங்கள்” இறுவட்டில் பாடல்பாடிய இசையமைத்த அத்தனை கலைஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி வைத்தார் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களுடன் இணைந்து தமிழ் நேசன் அடிகளார்.
தமிழ் நேசன் அடிகளாரின் “இரக்கத்தின் இராகங்கள்” இறுவட்டு வெளியீட்டு விழா-முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 19, 2016
Rating:
No comments:
Post a Comment