மன்னார் கல்வி வலயம் நடாத்திய ஆடி மாத முழு நிலாக்கலைவிழா---முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் கல்வி வலயம் நடாத்திய ஆடி மாத முழு நிலாக்கலைவிழா இன்று 19-07-2016 காலை 9-30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி-செலின் சுகந்தி செபஸ்ரியான் தலைமையில்….
பிரதம விருந்தினராக திரு-இராசா இரவீந்திரன்-செயலாளர் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடக்கு மாகாணம்.
சிறப்பு விருந்தினராக திருமதி.விக்கினராஜா மதிவாணி-அழகியற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர்-வடக்குமாகாணம்
இவர்களுடன் மன்னார்- நானாட்டான் -முசலி பிரதேசங்களை சேர்ந்த கல்விப்பணிப்பாளர்கள் பிரதி கல்விப்பணிப்பாளர்கள் உதவி கல்விப்பணிப்பாளர்கள் கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவமாணவிகள் அரச அதிகாரிகள் கலந்து கொள்ள......
பாடசாலை மாணவமாணவிகளின் கீர்த்தனைகள்- நடனங்கள்- நாட்டிய நிகழ்வுகள் சிறுவர் நாடகம்- இசைக்கச்சேரி நிகழ்வுகளாக அமைய கல்வியில் சிறந்த செயற்பாட்டினை வெளிப்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சாண்றிதழும் விருதுகளும் வழங்கிய தோடு மூத்த கலைஞர் கௌரவிப்பும் இடம்பெற்றது…
சிறப்பு நிகழ்வாக விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த பிரமுகர்களுக்கு மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி-செலின் சுகந்தி செபஸ்ரியான் அவர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வாறான நிகழ்வுகள் மூலம் எமது திறமையினையும் ஆளுமைப்பண்பு செயற்திறன் மிக்கசெயற்பாடு வளர்த்துக்கொள்ளவாய்ப்பாக அமைவதோடு திறன் விருத்தியே எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளும் என்றதொனிப்பொருளில் நிகழ்வு சிறப்பாக அமைந்தது.
மன்னார் கல்வி வலயம் நடாத்திய ஆடி மாத முழு நிலாக்கலைவிழா---முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 19, 2016
Rating:
No comments:
Post a Comment