ஆல்ப்ஸ் மலையில் பனிக்கட்டிகள் சரிந்து விபத்து: இருவர் கவலைக்கிடம்....
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் இருவரின் நிலைமை மிக மோசமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
வடகிழக்கு சுவிட்சர்லாந்தில் 2,500 மீட்டர் (8,200 அடி) உயரம் உள்ள Säntis மலையின் உச்சியை அடைய மொத்தம் 10 பேர் இரண்டு குழுவாக நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பயணத்தின் போது மலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதில் ஒரே குழுவை சேர்ந்தவர்கள் பனிச்சரிவில் சிக்கி 100 மீட்டர் கீழ்நோக்கி உருண்டு விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தை தொடர்ந்து மூன்று ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சமீபத்திய நாட்களில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு இருக்கும் என வானிலை ஆய்வு மைய நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
2500 மீட்டர் உயரத்தில் வெப்பநிலை உயரும் போது, பனிக்கட்டிகள் உருகி சரிந்து விபத்திற்கு வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆல்ப்ஸ் மலையில் பனிக்கட்டிகள் சரிந்து விபத்து: இருவர் கவலைக்கிடம்....
Reviewed by Author
on
July 10, 2016
Rating:

No comments:
Post a Comment