யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு 2ஆவது தென்னை முக்கோண வலயம் நேற்று பிரகடனம்
இலங்கையின் இரண்டாவது
தென்னை முக்கோண வலயமாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய 3
மாவட்டங்களை பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க
பிரகடனப்படுத்தியுள்ளார்.
நீங்களும்
உங்கள் உறவு களை பிரிந்துள்ளீர்கள் என்பது எமக்கு நல்லாகவே தெரியும், அந்த
வழிகளில் இருந்து மீள்வதற்கு நாம் பல தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது. இந்த
வேலைத் திட்டமும் அதனோடு ஒன்றிணைந்த ஒன்று தான்.
எதிர்வரும்
காலங்களில் இந்த திட்டங்களில் மூலம் அனைத்து நாட்டு மக்களும் ஒன்றிணைந்து
சமாதானம் நிறைந்த அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும் என அமைச்சர் நவீன்
திசாநாயக்க தெரி வித்தார்
(09-07-2016 அன்று யாழ்ப்பாணம் வருகை தந்த
அமைச்சர் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில்
தென்னங்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து
கொண்டிருந்தார்.
இதன்போது உரையாற்றும் போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற
யுத்தம் முடிபுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தில் பல்லாயிரக்
கணக்கானவர்கள் கொல்லப்பட் டார்கள்.
இதன்போது
எனது தந்தையாரான காமினி திசாநாயக்கவும் கொல்லப்பட்டிருந்தார். இவ்வாறு பலர்
உறவுகள் இல்லாமல் இப்போதும் உள்ளதனை நான் அறிவேன்.
யுத்தத்தினால்
மனிதர்கள் மட்டுமல்ல வளம் தரும் மரங்களும்தான் அழிக்கப்பட்டன. குறிப்பாக
தென்னை மரங்கள் இங்கு நடைபெற்ற யுத்தத்தினால் பெரிதும் அழிவடைந்துள்ளது.
நாங்கள் இவற்றை எல்லாம் மீள கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகின்றோம்.
இதன்
முதற்கட்டமாக தான் இலங் கையின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமாக
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை பிரகடனப்படுத்தி
உள்ளோம்.
இந்த மூன்று மாவட்டங்களி லும் தேயிலை, இறப்பர் ஆகிய
பயிர்கள் பயிரிட முடியாவிட்டாலும், தென்னை பயிர்ச்செய்கையை மேற்கொள்ள
முடியும். கடந்த கால அரசாங்கம் இவை தொடர்பில் கவனம் செலுத்தாத போதிலும்
தற்போது பொறுப்பேற்றுள்ள அரசாங்கம், இவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி
செயற்திட்டங்களை நடை முறைப்படுத்தியும் வருகின்றது.
நாடு
முழுவதும் எண்பதாயிரம் தென்னை மரங்களை நாட்டுவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டு வரும் அதே வேளை, வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 45 ஆயிரம்
மரக்கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். யுத்தம்
முடிவடைந்து விட்டது. அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் இன்னமும் முடிவடையவில்லை.
நான் எனது தந்தையை இழந்தது போன்று,

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு 2ஆவது தென்னை முக்கோண வலயம் நேற்று பிரகடனம்
Reviewed by Admin
on
July 11, 2016
Rating:

No comments:
Post a Comment