அவுஸ்திரேலியாவில் மாடியில் இருந்து குழந்தையுடன் கீழே குதித்து பெண் தற்கொலை...
அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை பொறியாளராக பணியாற்றி வருபவர் கன்னாராம் ஸ்ரீநிவாஸ்.
இவர் தனது மனைவி சுப்ரஜா, ஐந்துவயது மகள் மற்றும் நான்குமாத ஆண் குழந்தையுடன் இங்குள்ள விக்டோரியா பகுதியில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை தனது வீட்டு பல்கனியில் இருந்து கைக்குழந்தை ஸ்ரீஹனுடன் கீழே குதித்த சுப்ரஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தியாவில் உள்ள அவரது பெற்றோர் சுப்ரஜாவின் உடலை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் மாடியில் இருந்து குழந்தையுடன் கீழே குதித்து பெண் தற்கொலை...
Reviewed by Author
on
July 19, 2016
Rating:

No comments:
Post a Comment