தமிழ் தின போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவி
2016ம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் தின போட்டியில் தனி இசைப்போட்டியில் மட்டக்களப்பு மாணவி முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட். வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப் பாடசாலை மாணவி சிவநாதன் சிவஸ்சியா முதல் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அகில இலங்கை ரீதியான தமிழ் தின போட்டியில் ஐந்தாம் பிரிவில் தனி இசைப்போட்டியில் சிவநாதன் சிவஸ்சியா இந்த முதல் இடத்தினைப்பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப் பாடசாலையில் 13ம் தரத்தில் கலைப்பிரிவில் கற்றுவரும் இவர் பாடசாலையில் பல்வேறு பகுதிகளில் தனது திறமையினை வெளிப்படுத்தி வந்ததுடன் இசைத்துறையிலும் பல்வேறு பரிசுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் மட்டக்களப்பினை சேர்ந்த திருதிருமதி சிவநாதன்,திவ்யாவின் மூத்த புதல்வியாவார்.
தமிழ் தின போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவி
Reviewed by Author
on
July 25, 2016
Rating:

No comments:
Post a Comment