தெல்லிப்பழை மாணவிக்கு கொழும்பில் தங்கப்பதக்கம்....
இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால் நடாத்தப்பட்ட சிரேஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி மாணவி ஜெகநாதன் அனித்தா கோலூன்றிப்பாய்தலில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
கொழும்பு தியகம மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நேற்று(09.07.2016) நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் 3.30 மீற்றர் உயரத்தினை தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.
3.35 மீற்றர் உயரமே இப்போட்டியில் சாதனையாக இருந்தது.
அனித்தா இச்சாதனையை தாண்டக்கூடிய அடைவுமட்டத்தினை(Performance) கொண்டிருந்தும் துரதிஷ்டவசமாக தவறவிட்டுவிட்டார்.
இல்லையேல் சாதனையை முறியடித்து சாதனை விருதையும் பெற்றிருக்கலாம்.
தெல்லிப்பழை மாணவிக்கு கொழும்பில் தங்கப்பதக்கம்....
Reviewed by Author
on
July 11, 2016
Rating:

No comments:
Post a Comment