இறுதி யுத்ததில் இடம்பெற்றது என்ன? சிங்களவர்களும் அறிந்துகொள்ளட்டும்.....
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தென் இலங்கையில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம உரிமை இயக்கதின் தலைவர் ரவீந்திர முதலிகே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த வகையில் யுத்தக்குற்ற சம்பவங்கள் குறித்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை விரைவில் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதி யுத்ததில் இடம்பெற்றது என்ன? சிங்களவர்களும் அறிந்துகொள்ளட்டும்.....
Reviewed by Author
on
July 11, 2016
Rating:

No comments:
Post a Comment