அண்மைய செய்திகள்

recent
-

இணுவில் ஞானலிங்கேஸ்வரருக்கு நேற்று செந்தமிழில் குடமுழுக்கு

சைவ மகா சபை மற்றும் சிவஞான சித்தர்பீடம் என்பவற்றின் ஆதரவுடன் சைவநெறிக்கூடம் இணுவில் தெற்கில் புதிதாக அமைத்த ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை செந்தமிழில் திருக் குடழுக்கு நடத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஒலி வானைப் பிளக்க ஞானலிங்கேஸ்வரருக்கு தமிழ் அருட்சுனைஞர்கள் திருக்குடமுழுக்கை நடத்திவைத்தனர்.

ஆலயங்களில் மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியான தமிழில் பூசைகள் ,டம்பெறவேண்டும் என்று சைவநெறிக்கூடமும் சைவ மகா சபையும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதோடு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பெருமுயற்சியின் பயனாக சைவநெறிக்கூடம் மேற்படி ஆலயத்தை கட்டியெழுப்பி நேற்று திருக்குடமுழுக்கை நடத்தியிருக்கின்றது.

ஐந்து தளக் கோபுரத்துடன் அமைக்கப்பட்ட மேற்படி ஆலயத்தில் சுவிஸ் ஞானலிங்கேஸ்வரர் ஆலய பிரதம அருட்சுனைஞரும் இணுவிலைச் சேர்ந்தவருமான திருநெறிய சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தலைமையிலான 108 அருட்சுனையர்கள் செந்தமிழ் திருக்குடமுழுக்கு விழாவை நடத்தினர்.

இந்த திருக்குடமுழுக்கு விழாவிற்கு முன்னதாக நேற்றுக் காலை 7.30 மணிக்கு மருதனார்மடம்
இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் இருந்து இணுவில் ஞானலிங்கேஸ்வரம் வரை பாத யாத்திரை ஒன்று
இடம்பெற்றது.

சைவநெறிக்கூடம், சிவஞானசித்தர்பீடம் என்பவற்றுடன் இணைந்து சைவ மகா சபை ஏற்பாடு செய்த இந்தப் பாத யாத்திரையில் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் இருந்து வருகைதந்த பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டனர். பாத யாத்திரையில் பங்கெடுத்த அடியவர்கள் பாற்குடங்களை ஏந்திவந்து ,ணுவில் ஞானலிங்கேஸ்வரருக்கு தமது கைகளாலேயே அபிசேகம் செய்தனர்.

ஆலயத்திற்கு நேர் முன்னிலையில் நடப்பட்ட கம்பங்களில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கன் பயன்படுத்திய தனித்தனிக் கொடிகள், சைவநெறிக்கூடத்தின் கொடி, மற்றும் நந்திக்கொடி என்பன ஏற்றப்பட்டன. இதன் பின்னரே கலசங்களுக்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.

மேற்படிக் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சைவ மகாசபை யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிராந்தியங்களில் மாணவர்களுக்கிடையே நடத்திய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு நேற்யை தினம் ஆலயத்தில்வைத்து பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.

இந்த செந்தமிழ் திருக்குடமுழுக்கு விழாவில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பராமாச்சார்ய சுவாமிகள், தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளார், யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன், யாழ்.இந்தியத் துணைத்தூதுவர் ஆர்.நடராஜன், மற்றும் பௌத்த பிக்குகள், சுவிஸ் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட வெள்ளை இனத்தவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





இணுவில் ஞானலிங்கேஸ்வரருக்கு நேற்று செந்தமிழில் குடமுழுக்கு Reviewed by NEWMANNAR on July 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.