அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (11-07-2016) கேள்வி பதில்

கேள்வி:−
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் Suthanlaw அண்ணா!நான் (×−×−×−)23 வயதுப் பெண்.நான் (×−×−×−)பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு படிக்கிறேன்.முதலாம் ஆண்டில் நான் ஒருவனுக்குத் தோழியானேன்.பின்பு நாங்கள் நெருங்கிய நண்பர்களானோம்.எங்களைப் பார்ப்பதற்குக் காதலர்கள் போல் இருக்கிறது என்று பலர் கூறியுள்ளார்கள்.
ஆனால் நாங்கள் அப்படி நினைத்ததே இல்லை.
நாங்கள் தினமும் கைப்பேசி மற்றும் ‘வாட்ஸ் அப்' மூலம் பேசிக்கொள்வோம்.எங்கள் 6 வருட நட்பு பற்றி என் பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்குத் தெரியாது. தெரிந்தால் தவறாக நினைப்பார்களோ என்று மறைத்துவிட்டேன் .
இப்போது என் பெற்றோர் எனக்கு திருமணம் பார்க்கிறார்கள். இதில் பிரச்சனை என்னவென்றால், எனக்கு வரப்போகும் கணவன் எங்கள் நட்பைப் புரிந்து கொள்வாரா என்பதுதான். என் வருங்கால நலனுக்காக என்னிடம் பேசாமல் இருக்கவும் என் நண்பன் தயாராக உள்ளான்.ஆனால் என் புனிதமான நட்பை இழந்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் இல்லை.
என் வருங்கால கணவர் எங்கள் நட்பைப் புரிந்துகொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.என் நட்பையும் இழக்காமல் என் திருமண வாழ்வும் சிறப்பாக இருக்க வழி கூறுங்கள் அண்ணா!

பதில்:−

அன்பான சகோதரியே! உங்களிடம் நான் ஒரு கேள்வியினை கேட்க விரும்புகிறேன்"நீங்கள் திருமணம் பண்ணப் போகின்ற கணவர் தங்களை போல ஒரு பெண்ணிடம் நட்பாக பழகினால் தங்களின் மனநிலை எத்தகையதாக இருக்கும்?அந்த மனதநிலையிலிருந்து நீங்கள் முடிவெடுங்கள்.இருப்பினும்"நட்புக்காகக் கொடிபிடிக்கும் தோழியே! 'இது நட்புதான்' என்று உறுதிப்படுத்தும் உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பதிலளிக்கிறேன்.
கம்பி மேல் நடக்கும் திறமை உங்களுக்குத் தேவை. வருங்காலக் கணவர் உங்கள் நட்புக்குத் தடையாக இல்லாமலிருக்க நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். நண்பரைவிட கணவர் நெருக்கமானவராக இருக்க வேண்டும். அதாவது, எல்லாவற்றையும் முதலில் கணவரிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும்.நண்பர் மாதிரி அவர் Response செய்யாவிட்டாலும் நீங்கள் கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கணவன்-மனைவியின் அந்தரங்கங்களை நண்பரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. 'என்னைவிட அவன் நெருக்கமோ?' எனும் கேள்வி கணவனிடத்தில் வந்துவிட்டால் பிரச்சனைதான்! 'நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்' எனும் மனநிலை கணவனிடத்தில் தலைதூக்கும்.

கணவன்-மனைவி உறவுதான் மிக நெருங்கிய உறவாக இருக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பு பொதுவாக இரு தரப்பிலும் இருக்கும்.திருமணம் நிச்சயமாகும் தருணத்திலிருந்து மிகக் கவனமாகச் செயல்படுங்கள். ஆரம்பகால உரையாடல்களில் நண்பருக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசாதீர்கள்.அந்தக் காலம் உங்கள் வருங்காலக் கணவருக்குரியதாகும்
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வாழ்வில் தோழரின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசலாம். அவரைப் பற்றிப் பேசும்போது விழிப்போடு இருந்து, கணவரின் ‘Re-action ஐ கவனியுங்கள். அது ‘Possitive'ஆக இருந்தால் உங்கள் நட்பு பிழைக்கும்.நட்பு, காதல் இரண்டுக்குமிடையே ஒரு மெல்லிய கோடுதான்.
நண்பரிடமிருந்து கொஞ்சம் விலகி இருப்பதைத் தவிர்க்க முடியாது.தினமும் சந்திப்பது, மணிக்கணக்காக ‘வாட்ஸ் அப்'பில் உரையாடுவது இதையெல்லாம் குறைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் உங்கள் இருவரது மணவாழ்விற்கும் நல்லது. மற்றவர் உங்கள் இருவரையும் காதலர்கள் என்று சொன்னதும், பெற்றோரிடம் நீங்கள் நட்பை மறைத்ததும், இந்த நட்பு காதலாக வாய்ப்பிருக்கலாம் என்று தோன்றுகிறது.திருமணம்பார்ப்பதற்கு முன் நன்றாக யோசியுங்கள்.
எனது தனிப்பட்ட கருத்தானது"உங்கள் இருவருக்குள்ளும் சென்டிமென் மற்றும் அன்பு ஆகியவற்றுக்கு இடையில் யுத்தம் நடைபெறுகிறது.

நீங்கள் தற்போது நட்பிற்கு மரியாதை கொடுத்து அந்த சென்டிமென்டில் வாழுகிறீர்கள்.அந்த சென்டிமென்தான் தற்போது உங்கள் இருவருக்குமான அன்பை மேலோங்க செய்யாமல் தடுக்கிறது.ஆனால் பிரிவு என்று வரும் போது சென்டிமென்டை அன்பு வெற்றி கொள்ளும்.அந்த நேரம் அன்பு வெளிப்படுத்தப்படும்.ஆனால் அந்த நிமிடம் நீங்கள் இன்னொருவருக்கு சொந்தமானவளாக,மனைவியாக இருப்பீர்கள்.

இதனை நான் அனுபவத்தினுடாக காண்கிறேன்.எனவே உங்கள் இருவருக்கிடையிலான அன்பை வெளிபடுத்துங்கள்."நட்பா பழகிற்று காதலிக்கலாமா?என்று சிந்திப்பதனை தவிருங்கள்.அவ்வாறு சிந்திப்பது வெறும் சென்டிமென்தான்.அது ஒழுக்கத்திற்கோ,மனித குல தர்மத்திற்கோ எதிரானது அல்ல.
           இக் கருத்தினை "நட்பு"என்ற உலகத்தில் வாழ்பவர்கள் விமர்சிக்கலாம்.அவர்களிடம் கேட்கிறேன்"நட்பு என்ற சென்டிமென்றில் வாழ்வது சரியா?அல்லது பிரிய முடியாமல் வாழ்நாள் முழுவதும் நினைத்து நிம்மதியில்லாமல் திருமணம் பண்ணிய நபரோடு சேராமல் சீரழிந்து போவது சரியா?எனவே அன்பானவர்கள் நட்பு என்ற வட்டத்திற்குள் சென்டிமென்றாக அகப்பட்டு புழுவாக துடிப்பதனை தவிர்த்து அன்பான,சந்தோஷமான வாழ்க்கையில் ஈடுபடுங்கள்.இதனால் மூன்றாம் நபர் பாதிக்கப்பட வாய்ப்பிருக்காது.

குறிப்பு 

 உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .

இன்றைய (11-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.