இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் சிறப்பாக இடம் பெற்ற மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழா.(படங்கள் இணைப்பு)
மன்னார் மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழா இன்று சனிக்கிழமை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரர் ஆயர் யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை,யாழ் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் இணைந்து இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியினைத் தொடர்ந்து மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம் பெற்றது.
இதன் போது வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,மன்னார் மற்றும் வவுனியா நீதிபதிகள், சட்டத்தரணிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திணைக்களத்தலைவர்கள் உற்பட இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசிரை பெற்றனர்.
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்ட நிலையில் இன்று (2) சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
(02-6-2016)

Reviewed by NEWMANNAR
on
July 02, 2016
Rating:
No comments:
Post a Comment