காணாமற்போனோருக்கான பணியகம் அமைப்பு காலத்தை கடத்தும் உத்தியே!
இலங்கை அரசாங்கத்தினால் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காணமல்போனோருக்கான பணியகம் பரணகம ஆணைக்குழு போன்று சாட்சியங்களை மாத்திரம் பதியும் ஒன்றாகவே காணப்படும் எனவும் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை காணாமல்போனோருடைய உறவுகள் நடாத்திய கலந்துரையாடலில் கலந்துகொண்டு விளக்கம் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்டபோதும் காணாமல்போனவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என தைப்பொங்கல் தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இதுவரை காணமால்போனவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் ஜனாதிபதி இன்று வரை எதுவும் கூறவில்லை.
இதேவேளை இராணுவத்திடம் கையளித்தோம் என உறவுகள் சாட்சி சொன்னாலும் கூட இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு குறித்த காணாமல் போனோருக்கான பணியகம் நியமிக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார். இதுவும் ஒரு காலத்தை கடத்தும் நடவடிக்கையாகவே அமையவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்
முல்லைத்தீவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை காணாமல்போனோருடைய உறவுகள் நடாத்திய கலந்துரையாடலில் கலந்துகொண்டு விளக்கம் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்டபோதும் காணாமல்போனவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என தைப்பொங்கல் தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இதுவரை காணமால்போனவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் ஜனாதிபதி இன்று வரை எதுவும் கூறவில்லை.இதேவேளை இராணுவத்திடம் கையளித்தோம் என உறவுகள் சாட்சி சொன்னாலும் கூட இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு குறித்த காணாமல் போனோருக்கான பணியகம் நியமிக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார். இதுவும் ஒரு காலத்தை கடத்தும் நடவடிக்கையாகவே அமையவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்
காணாமற்போனோருக்கான பணியகம் அமைப்பு காலத்தை கடத்தும் உத்தியே!
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
July 02, 2016
 
        Rating: 
      
        Reviewed by NEWMANNAR
        on 
        
July 02, 2016
 
        Rating: 

No comments:
Post a Comment