மன்னார் மாவட்டத்தின் மடு முள்ளிக்குளப்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கிரவல் மண் அகழ்வு நடவடிக்கை எடுக்கப்படுமா………???
மன்னார் மாவட்டத்தின் மடுப்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கிரவல் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
மடுப்பிரதேசத்தில் வனப்பகுதியில் அனுமதியின்றி கிரவல் அகழ்வு நடைபெறக்காரணம் இதுதான் மடு பூமலந்தான் பிரதேசத்திற்கு உள்ள பகுதியில் கிரவல் அகழ்வுக்காக கொடுக்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தினை வைத்துக்கொண்டு மடுப்பகுதியில் முள்ளிக்குளத்தில் கிரவல் அகழ்வதும் அதுமட்டுமன்றி அகழ்வுக்கும் ஏற்றுமதிக்கும்-Transport தனியான அனுமதிப்பத்திரங்கள் உண்டு ஆனால் ஒரு அனுமதிப்பத்திரத்தினை வைத்துக்கொண்டு இரண்டையும் செய்கின்றனர்.
அனுமதிப்பத்திரமின்றியும் குறிக்கப்பட்ட பிரதேசமின்றியும் அனுமதிப்பத்திரம் காலவதியான பின்பும் கொடுக்கப்பட் அனுமதிப்பத்திரத்திற்கு மேலாக அளவுக்கு அதிகமாகவே கிரவல் மண் அகழ்வு நடைபெறுகின்றது.
சட்டவிரோதமான முறையில் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள் வாகனங்களையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தும் ஏன் சட்டநடவடிக்கைகளை எடுக்கவில்லை….
இவ்வாறு எங்கள் வளம் சுரண்டப்படுவதை பார்த்துக்கொண்டிருக்கமுடியாது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மன்னார் மாவட்டத்தின் மடு முள்ளிக்குளப்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கிரவல் மண் அகழ்வு நடவடிக்கை எடுக்கப்படுமா………???
Reviewed by Author
on
July 18, 2016
Rating:

No comments:
Post a Comment